News October 2, 2025
₹4 கோடி இழப்பீடு: youtube மீது ஐஸ்வர்யா ராய் வழக்கு

யூடியூப், கூகுள் நிறுவனங்கள் மீது, ₹4 கோடி இழப்பீடு கோரி அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். AI டீப் பேக் மூலம் தங்கள் முகங்கள் யூடியூபில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், தங்கள் முகங்களை வைத்து சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News October 2, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்த நிலையில், தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<17894555>>மஞ்சள் அலர்ட்<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் நண்பர்களே!
News October 2, 2025
குறைந்த முதலீட்டில் பயனடைய விருப்பமா?

குறைந்த முதலீட்டில் பயனடைய சிறந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்ஸ் ஏராளமானவை உள்ளன. அவை என்னென்ன ஸ்கீம்ஸ் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவை அனைத்தும், சிறிய தொகையுடன் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத்திற்கான முதலீடுகள். இவற்றில் நீங்கள் விரும்பும் ஸ்கீம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 2, 2025
ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு புது ஆயுதம் தரும் அமெரிக்கா

ரஷ்யாவை பணிய வைக்க முடியாத விரக்தியில், டிரம்ப் புது வியூகத்தை கையிலெடுக்கிறார். 2,500 கிமீ தொலைவு சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவற்றை கொண்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உக்ரைனால் தாக்க முடியும். அமெரிக்கா அப்படி முடிவுசெய்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.