News October 2, 2025
தென்காசியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தென்காசி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News October 2, 2025
சங்கரன்கோவில் அருகே வேன் விபத்து; 18 பேர் காயம்

வன்னிக்கோனந்தல் அருகே இன்று (அக்.2) வேன் டயர் வெடித்து விபத்துகுள்ளானதில் குலசேகரப்பட்டனம் கோவிலுக்கு சென்ற 18 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் கௌசல்யா விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
News October 2, 2025
தென்காசி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 2, 2025
தென்காசி மக்களே., இங்கு இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள சிவகுருநாதபுரத்தில் வருகிற அக்டோபர் -04 ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகுருநாதபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.