News April 14, 2024
கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 161/7 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே LSG சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. LSG அணியில் அதிகபட்சமாக பூரண் 45, கே.எல்.ராகுல் 39, பதோனி 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Similar News
News October 28, 2025
இந்தியாவில் மீண்டும் பயணிகள் விமானம் தயாரிப்பு

இதுவரை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான HAL, 1988- க்கு பிறகு முதல்முறையாக உள்நாட்டில் பயணிகள் விமானத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. PM மோடியின் UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவின் 2, 3-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறுகிய தூர விமான சேவைக்காக, இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
News October 28, 2025
நிறத்தை மாற்றும் உயிரினங்கள்

உயிர்வாழ்வதற்காக சில உயிரினங்கள், அதன் நிறங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாக உள்ளன. இனச்சேர்க்கைக்கு, சுற்றுப்புற சூழலில் இணைய, வேட்டையாட, துணைகளை ஈர்க்க போன்ற விஷயங்களுக்காக நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. அவை என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் நேரில் பார்த்த உயிரினம் எது?
News October 28, 2025
தமிழகத்தில் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சீமான்

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நாதக ஏற்காது என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புலம் பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்யட்டும், ஆனால் அவர்களது மாநிலத்திற்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாதகவை அழைக்க மாட்டார்கள் என கூறிய அவர், சென்றாலும் எந்த பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


