News October 2, 2025
என்னது வெறும் ₹11-க்கே வியட்நாம் போகமுடியுமா?

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக வியட்நாமின் வியட்ஜெட் ஏர்லைன்ஸ் அதிரடி Offer-ஐ அறிவித்துள்ளது. அதாவது டிச.31ம் தேதி, 2025 வரை இந்தியாவில் இருந்து வியட்நாமுக்கு வெறும் ₹11-ல் flight டிக்கெட் எடுத்து போகலாமாம். ஆனால் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே புக்கிங், பொதுவிடுமுறைகளில் டிக்கெட் கிடைக்காது என பல நிபந்தனைகள் இருக்கிறது. வியட்ஜெட் ஏர்லைன்ஸ் Website-ல் தெரிந்துகொள்ளுங்கள்.
Similar News
News October 2, 2025
ரகுராம் ராஜன் தந்தை மறைவு: CM ஸ்டாலின் இரங்கல்

RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தை <<17887963>>ராகவாச்சாரி கோவிந்தராஜன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும், ரகுராம் ராஜனை தொடர்பு கொண்டு அவருக்கு இரங்கலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், RAW அமைப்பில் அவரது பணி நன்றியுடன் நினைவுகூரப்படும் என ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

தவெக தலைமையின் மறு அறிவிப்பு வரும்வரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரூர் துயரத்தில் பலியானவர்களின் விவரங்களை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நிர்வாகிகள் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கோர்ட் உத்தரவு கிடைத்த பிறகு கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளராம்.
News October 2, 2025
தாய் கண்முன் இளம்பெண் ரேப்: 2 காவலர்கள் டிஸ்மிஸ்

<<17875067>>திருவண்ணாமலை<<>> அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 2 காவலர்களையும் காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது. லோடு ஏற்றிவந்த வாகனத்தில் வந்த, ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை விசாரணை என அழைத்து சென்ற காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரும் , தாயின் கண்முன்னே அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவலர்களே இப்படி செய்தால்?