News April 14, 2024

திருச்சி: தீ குளித்த இளைஞர்

image

மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் தமிழ்குடிமகன் (28). இவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 19, 2025

திருச்சி மக்களே இனி அலைச்சல் வேண்டாம்

image

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பள்ளி முதல் ஆதார், பாஸ்போர்ட் பெறுவதற்கு மிக முக்கியமானதாகும். பிறப்பு சான்றிதழ் பெற இனி அலைச்சல் வேண்டாம். புதிய சான்றிதழ் பெறுவதற்கும், தொலைந்த சான்றிதழ் பெறுவதற்கும்<> இங்கே க்ளிக் செய்து <<>>சுலபமாக பெற முடியும். மேலும் உங்கள் பகுதி பிறப்பு பதிவாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை அணுகியும் பெற முடியும். இதனை LIKE மற்றும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

திருச்சி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

திருச்சி மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News September 19, 2025

திருச்சியில் குழந்தைகளுக்கு சதுரங்க பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வரும் 21-ம் தேதி மாலை 3.30 முதல் 5.30 மணி வரை, சதுரங்க பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட சதுரங்க சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் பயிற்சி அளிக்கிறார். குழந்தைகள் சதுரங்க போர்டுடன் கலந்து கொள்ளலாம். முன்னதாக காலை 10.30 முதல் 11.30 மணி வரை, சதுரங்க பயிற்சியாளர் சங்கரா நடத்தும் வாராந்திர பயிற்சியும் நடைபெற உள்ளது என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!