News October 2, 2025
அப்பவே அப்படி செய்தவர்தான் அன்புமணி: ராமதாஸ்

தமிழ்குமரனுக்கு வழங்கிய இளைஞர் சங்க தலைவர் பதவியை 2022-லேயே அன்புமணி ஏற்க மறுத்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். பதவியில் இருந்து விலகக்கோரி தமிழ்குமரனுக்கு அன்புமணி அழுத்தம் கொடுத்ததாக கூறிய அவர், அதனால் அப்போதே தந்தை-மகனுக்கு இடையே பிரச்னை தொடங்கியது எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதையடுத்துதான் பேரன் முகுந்தனுக்கு பதவி கொடுத்தபோது தன் மீது மைக் பாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
ஆதவ் அர்ஜுனாவுக்கு NSG பாதுகாப்பா? வெடித்தது சர்ச்சை

ஆதவ் அர்ஜுனா நேற்று டெல்லி சென்றபோது, அவருடன் 2 NSG கமாண்டோக்கள் பயணித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசாங்கத்தின் எந்த உயர் பொறுப்பிலும் இல்லாத, தேர்தலில் இதுவரை போட்டியிடாத ஒரு கட்சியின் நிர்வாகியோடு NSG வீரர்கள் பயணிக்க என்ன காரணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். PM, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட சில VVIP-களுக்கு மட்டுமே NSG பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News October 2, 2025
சற்றுமுன்: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

காலையில் மகிழ்ச்சியை கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை, மாலையில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் சவரனுக்கு ₹560 குறைந்த நிலையில், மாலையில் ₹560 அதிகரித்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹10,950-க்கும் ஒரு சவரன் ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் சவரன் ₹30,000 வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 2, 2025
பூரி உப்பி வருவதற்கு இதை பண்ணுங்க

பூரி சுடும் போது பலருக்கும் அது உப்பி வரவில்லை என்ற கவலை ஏற்படும். இதற்கு நீங்கள் மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேருங்கள், எண்ணெய் நன்கு சூடான பிறகே கடாயில் பூரி மாவை போட வேண்டும். மேலும், பூரி அதிக எண்ணெய் பிடிக்காமல் இருக்க மாவை இறுக்கமாக பிசையாதீர்கள். அதே போல எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால், பூரியில் அதிக எண்ணெய் பிடிக்காது. இதை உங்களுடைய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..