News October 2, 2025

கரூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ஈரோடு – கரூர் தடத்தில் உள்ள பல்வேறு பாலங்களில் பொறியியல் பணி நடக்க உள்ளது. இதனால் அக்., 3, 9 ஆகிய நாட்களில் காலை, 7:20க்கு புறப்படும், திருச்சி – ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதியம், 2:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், மதியம், 3:05க்கு கரூரில் இருந்து கிளம்பும். இரு மார்க்க ரயில்களிலும் ஈரோடு முதல் கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது.

Similar News

News October 2, 2025

கரூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி சீகம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் பணிக்கம்பட்டியிலிருந்து அய்யர்மலை செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ஆறுமுகம் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

News October 2, 2025

கரூர் அருகே விபத்து ஓட்டுநர் உயிரிழப்பு!

image

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுருதீஸ்வரன் (23). இவர் நேற்று தனது சரக்கு வாகனத்தில் மலைக்கோவிலூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எந்த சிக்னலும் இல்லாமல் சரவணன் நிறுத்தி வைத்திருந்த ஈச்சர் வேன் பின்னால் மோதியதில் சுருதீஸ்வரன் படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 2, 2025

கரூர்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

1.அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2. இதற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3. ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
4.<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!