News April 14, 2024

திருவண்ணாமலை: 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மின்கம்பத்தில் மோதி, அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் – ஏம்பலம் செல்லும் வழியில் இன்று மதியம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News November 1, 2025

தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

தி.மலை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

திருவண்ணாமலை: பிரபல நடிகை சாமி தரிசனம்

image

(நவ.1) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகையான தேவயானி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார். பின் அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரிடம் செல்பி எடுக்க விரும்பிய ரசிகர்களுடன் பொறுமையாக நின்று எடுத்தார்.

News November 1, 2025

திருவண்ணாமலை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட அட்டவணை

image

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நவம்பர் மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் கோட்ட அளவில் நடைபெற உள்ளன. வந்தவாசி – நவ.4ம் தேதி, செங்கம் நவ.6, போளுர் நவ.11, சேத்துப்பட்டு நவ.13, செய்யாறு நவ.18, திருவண்ணாமலை கிழக்கு நவ.20, ஆரணி நவ.25 , திருவண்ணாமலை மேற்கு நவ.27-ல் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் காலை 11 மணியளவில் நடைபெறும் என மின்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!