News October 2, 2025

காமராஜர் கட்டிய முக்கிய அணைகள்

image

காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சில முக்கிய அணைகளை தெரிந்துகொள்வோம். அவர் 1954 முதல் 1963 வரை CM ஆக இருந்த போது, விவசாயத்திற்காக கட்டப்பட்ட அணைகள், 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, 1955-ல் பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த போது, மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். SWIPE செய்து பார்க்கவும்.

Similar News

News October 2, 2025

சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்

image

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால், அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், நாளை சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அக்.5-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 2, 2025

பெண்களுக்கு ₹50,000 தரும் அரசு திட்டம்

image

உணவு சார்ந்த தொழில்களை தொடங்க விரும்பும் பெண்களுக்கு அன்னபூர்ணா திட்டம் மூலம் கடன் வழங்குகிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் பிசினஸுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள் வாங்க ₹50,000 வரை கடன் பெறலாம். கடனை அடைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அருகில் இருக்கும் SBI வங்கிக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உங்க வீட்டு பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News October 2, 2025

திருமா திமுகவில் சேர்ந்து விடலாம்: வினோத் பி.செல்வம்

image

திருமாவளவன் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேர்ந்து விடலாம் என பாஜக மாநிலச் செயலர் வினோத் பி.செல்வம் விமர்சித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்த 15 பேர் பட்டியலின மக்களுக்கு சேர்த்துதான் பாஜக போராடுகிறது எனக் கூறிய அவர், கரூர் சம்பவத்தில் திமுகவுக்கு திருமா முட்டு கொடுப்பதாக விமர்சித்தார். மேலும், கரூர் துயரத்தில் உண்மையை கண்டறியும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிற்காது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!