News October 2, 2025

செங்கல்பட்டு: மாதம் ரூ.1,000 வரலயா? இங்கு போங்க

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய 5 ஆவணங்கள் போதுமானது. இதற்கு இது வரை விண்ணப்பிக்காதவர்கள் <>நாளை(அக்.3)<<>> செங்கல்பட்டில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். (SHARE)

Similar News

News October 2, 2025

செங்கல்பட்டு: குறைகளை இதில் புகார் அளிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <>க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 2, 2025

மாமல்லபுரத்தில் 3 பேர் பலி: CM இரங்கல்

image

மாமல்லபுரம் சூளேரிகாட்டுக்குப்பம் கடற்கரையில் கடந்த 28-ம் தேதி அகரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் தந்தை வெங்கடேசன் இவரது மகள்கள் கார்த்திகா (ம) துளசி ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

செங்கல்பட்டு மக்களே பணம் போகும்! உஷார்

image

தமிழக சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)

error: Content is protected !!