News October 2, 2025

₹30,000 சம்பளம்: 610 பணியிடங்கள் அறிவிப்பு

image

பெங்களூரு BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள 610 பொறியியல் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc. வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம்: 3 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் ₹30,000 – ₹40,000. இதுதவிர ₹12,000 மருத்துவம் உள்பட இதர செலவுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.7. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

Similar News

News October 2, 2025

BREAKING: சற்றுநேரத்தில் கட்சி அலுவலகத்தில் விஜய்

image

சென்னை பனையூர் இல்லத்தில் இருந்து 4-வது நாளாக தவெக தலைவர் காரில் வெளியே சென்றுள்ளார். சற்றுநேரத்தில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர், காந்தி, காமராஜர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு செல்லும் அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

News October 2, 2025

Cinema Roundup: விஜய் சேதுபதி படத்திற்கு ‘SLUMDOG’ தலைப்பு

image

*ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன் தொடர்’ நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மம்மூட்டி நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு ‘SLUMDOG’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக தகவல். *முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் இதுவரை ₹245.50 கோடி வசூலித்துள்ளது.

News October 2, 2025

நாளை அரசு விடுமுறையா? இல்லையா?

image

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பண்டிகைக்காக, சொந்த ஊர் சென்றவர்கள் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சொந்த ஊர்களுக்கு பலரும் சென்றுள்ளதால், நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் உள்பட பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசும் அறிவிக்குமா?

error: Content is protected !!