News October 2, 2025

கிருஷ்ணகிரி பெண்ணுக்கு வரதட்சனை கொடுமை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உரிகம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீலஜா. இவருக்கு கர்நாடகாவை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருண்குமார் (ம) அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு ஸ்ரீலஜாவை கொடுமை செய்துள்ளனர். சாலையில் அவரை இழுத்து வந்து தாக்கும் வீடியோ வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News October 15, 2025

கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு உதவித்தொகை!

image

வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11. மேலும் www.tnvelaivaippu.gov.in இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News October 15, 2025

கிருஷ்ணகிரியில் அக். 17-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக். 14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!