News October 2, 2025
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் டிரம்ப்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க விவசாயிகள் பிரச்னை குறித்து பேசப்படும் எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை வாங்க, சீனா மறுப்பதால் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரி விதிப்பால் கிடைத்த பணத்தில் விவசாயிகளுக்கு உதவுவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
நாளை அரசு விடுமுறையா? இல்லையா?

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பண்டிகைக்காக, சொந்த ஊர் சென்றவர்கள் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சொந்த ஊர்களுக்கு பலரும் சென்றுள்ளதால், நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் உள்பட பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசும் அறிவிக்குமா?
News October 2, 2025
ஆனந்த் மீது மட்டும் எப்படி வழக்கு? திருமா

விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு போட முகாந்திரம் இல்லை எனில், ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் மீது வழக்குப் பதியாவிட்டால், N.ஆனந்த் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறிய அவர், கரூர் துயரத்திற்கு விஜய் கவலைப்பட்டதாக தெரியவில்லை என சாடினார்.
News October 2, 2025
கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த PM மோடி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக PM மோடி நலம் விசாரித்துள்ளார். இந்த தகவலை X தளத்தில் பகிர்ந்த மோடி, அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நேற்று <<17890651>>ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட மல்லிகார்ஜுன<<>> கார்கேவுக்கு, பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.