News April 14, 2024
லாரன்ஸ் நடிப்பில் உருவாகிறது ‘ஹண்டர்’

விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வெங்கட் மோகன். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஹண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 18, 2026
தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 18, 2026
விவசாயிகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறது: கார்த்தி

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 18, 2026
திமுக கூட்டணியில் விசிகவால் ஏற்பட்ட திருப்பம்

அன்புமணி அதிமுக பக்கம் சென்றுவிட்டதால், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவார் எனப் பேசப்படுகிறது. இதனால் விசிகவை சமரசம் செய்யும் வேலையில் திமுகவினர் இறங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சாதிய பாமக கட்சியுடன் எப்போதும் உறவு கிடையாது என விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். இது, ராமதாஸ் மூலம் வடமாவட்டங்களில் பலம்பெற நினைத்த திமுகவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.


