News October 2, 2025
இன்று காலையிலேயே பள்ளிக்கு கிளம்புங்க

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறந்திருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பெற்றோர்கள் காலையிலேயே பள்ளிகளுக்கு சென்று தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
கரூர் துயரம்.. உதவிகளை அறிவித்தார் விஜய் தொண்டர்

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக சார்பில் உதவி செய்யப்படும் என்று அக்கட்சியின் மரிய வில்சன் அறிவித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணை நிற்க முடியும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான பள்ளி, கல்லூரி செலவுகளை ஏற்பதாகவும், வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
அப்பவே அப்படி செய்தவர்தான் அன்புமணி: ராமதாஸ்

தமிழ்குமரனுக்கு வழங்கிய இளைஞர் சங்க தலைவர் பதவியை 2022-லேயே அன்புமணி ஏற்க மறுத்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். பதவியில் இருந்து விலகக்கோரி தமிழ்குமரனுக்கு அன்புமணி அழுத்தம் கொடுத்ததாக கூறிய அவர், அதனால் அப்போதே தந்தை-மகனுக்கு இடையே பிரச்னை தொடங்கியது எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதையடுத்துதான் பேரன் முகுந்தனுக்கு பதவி கொடுத்தபோது தன் மீது மைக் பாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
‘மூக்குத்தி அம்மன் 2’ பர்ஸ்ட் லுக்.. நயன்தாரா விஸ்வரூபம்

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி முதல் பாகத்தை இயக்கியிருந்த நிலையில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் சுந்தர்.சி இப்படத்தை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா அம்மனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். உங்களுக்கு பிடித்த அம்மன் படத்தை கமெண்ட் பண்ணுங்க?