News October 2, 2025
கோவை அருகே மூதாட்டி கொலை: ஒருவர் கைது

பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் திருவள்ளுவர் சிலை பக்கம் குப்பை மேட்டில் மூதாட்டி பட்டீஸ்வரி (65), தலையில் காயத்துடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். குப்பை சேகரிப்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக, கேரளத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ், கல்லால் அடித்து கொன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. பின் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Similar News
News October 2, 2025
கோவை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி!

கோவை ராமநாதபுரம், 80 அடி ரோடு வஉசி சாலையில் வசித்து வந்தவர் வினோதா(43). இவர் தனது மகன் விஜய் ஆனந்துடன் நேற்று டூவீலரில் சென்றுள்ளார். 80 அடி ரோட்டில் சென்றபோது பேக்கில் இருந்து மொபைல் போனை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, கைப்பிடியை விட்டதால் எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!
News October 2, 2025
பேரூர் கல்யாணி யானை உடல் நலம் குறித்த அப்டேட்!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள கல்யாணி யானையை(33) கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இதன் உடல் நலனை வனத்துறையினர் 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கல்யாணி யானை 4.6 டன் எடையுள்ளது. நல்ல உடல் நலத்துடன் உள்ளது. நடைப்பயிற்சி நேரத்தை அதிகரிக்க அதிகாரிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
News October 2, 2025
கோவையில் 108 ஆம்புலன்ஸ் 8.45 நிமிடங்களில் வந்து சேரும்

108 ஆம்புலன்ஸ் சேவைகள் கோவையில் 62 ஆம்புலன்ஸ்கள், 4 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாண்டு துவக்கத்தில், கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்ட போது அவ்வாகனம் வந்து சேரும் நேரம் 10.1 3 நிமிடங்களாக இருந்தது. விபத்து பகுதிகளை அடையாளம் கண்டு ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டதால் தற்போது 8.45 நிமிடத்தில் வந்து சேர்வதாக கோவை மண்டல மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.