News October 2, 2025

தவெக ரசிகர் மன்றமாகவே உள்ளது: கார்த்தி சிதம்பரம்

image

தவெக ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட கட்சி அல்ல, அது ஒரு ரசிகர் மன்றமாகவே இன்னும் செயல்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அதே இடத்தில்தான் அதிமுக பரப்புரையும் நடந்தது என தெரிவித்த அவர், அக்கட்சியில் கட்டுப்பாடுகள் உள்ளதால் தொண்டர்கள் சரியாக இருந்தனர் என்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் சொல்லுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும், ஆனால் அது தவெகவில் இல்லை எனவும் கூறினார்.

Similar News

News October 2, 2025

மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் பூச்சிகளை விரட்ட TIPS

image

மழைக்காலத்தில் எறும்புகள், ஈக்கள், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், கரையான், சிலந்திகள், வண்டுகள் போன்ற பல பூச்சிகள் வீட்டிற்குள் வரலாம். இந்த பூச்சிகள் உணவில் விழுந்துவிடுமோ, நம்மை கடித்துவிடுமோ என்ற அச்சங்கள் தோன்றும். கவலையே வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இவற்றை நீங்கள் அகற்றலாம். அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.

News October 2, 2025

லோகேஷை ஓவர் டேக் செய்த நெல்சன்

image

‘ஜெயிலர் 2’ அடுத்த ஆண்டு ஜூன் 12-க்கு தான் ரிலீஸ் என்று ரஜினியே அறிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் ரீ-ரெகார்டிங் இல்லாத காட்சிகள் ரெடியாகி, கடந்த வாரமே ரஜினி அதை பார்த்துவிட்டாராம். கையோடு இயக்குநர் நெல்சனை கட்டிப்பிடித்து, ‘ஜெயிலர் 3-யோ அல்லது புது கதையோ மறுபடியும் நாம நிச்சயமா சேர்ந்து பண்ணலாம் என்று ஸ்பாட் சர்ப்ரைஸ் கொடுத்தாதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News October 2, 2025

BREAKING: விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு

image

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் பாதுகாப்பில் குறைபாடு இருக்கிறதா என்று பாதுகாவலர்களிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. கரூர் பரப்புரையின்போது அவர் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என தவெக குற்றம் சாட்டியது. இந்நிலையில், விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!