News April 14, 2024
என் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்

தனது திருமணம் பாரம்பரிய முறைப்படிதான் நடைபெறும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலில் எனது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். காஞ்சி பட்டுடுத்தி, மல்லிகைப் பூ வைக்க எனக்கு ஆசை. மணமகனும் வேஷ்டி சட்டையில்தான் இருக்க வேண்டும். திருமணத்திற்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News October 22, 2025
மகளிர் உலகக்கோப்பையில் தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை

நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. WWC-ல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை(11) விளாசி அந்த அணி அசத்தியுள்ளது. ஏற்கெனவே இதே தெ.ஆப்பிரிக்கா அணி, 2017-ல் 10 சிக்சர்களை அடித்திருந்தது. அவர்களே தங்களது சாதனையை 8 ஆண்டுகள் கழித்து தகர்த்துள்ளனர். 2-வது இடத்தில் 9 சிக்சர்களுடன் நியூசிலாந்து உள்ளது.
News October 22, 2025
வரலாற்றில் இன்று

*1879 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்விளக்கைப் பரிசோதித்தார்.
*1965 – இந்தியா- பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
*2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
*2008 – இஸ்ரோ சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
*2016 – இந்தியா கபடி அணி உலகக் கோப்பையை வென்றது
News October 22, 2025
ஐஸ்லாந்தில் கொசுக்கள்: அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்

பொதுவாக பனி பிரதேச நாடுகளில் கொசுக்கள் இருக்கவே இருக்காது. ஆனால் சமீபத்தில் மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஒரு காட்டில் விஞ்ஞானிகள் கொசுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது கப்பல் அல்லது கண்டெய்னர் வழியாக இங்கு வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றமும் கொசுக்கள் பரவலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடுமையான குளிரிலும் வாழ கொசுக்கள் பழகியுள்ளதால் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.