News October 2, 2025
கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள M S ராமய்யா ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம் சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 2, 2025
இந்திய அணியின் பிளேயிங் 11

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் ரெட்டி அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியா பிளேயிங் 11 : கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
News October 2, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 குறைந்து ₹10,880-க்கும், சவரனுக்கு ₹560 குறைந்து ₹87,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 10 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News October 2, 2025
காமராஜர் கட்டிய முக்கிய அணைகள்

காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சில முக்கிய அணைகளை தெரிந்துகொள்வோம். அவர் 1954 முதல் 1963 வரை CM ஆக இருந்த போது, விவசாயத்திற்காக கட்டப்பட்ட அணைகள், 60 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, 1955-ல் பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த போது, மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். SWIPE செய்து பார்க்கவும்.