News October 2, 2025

5 ஆண்டுகளும் நானே CM: சித்தராமையா

image

கடந்த 2023 மே முதல் கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் DCM டி.கே.சிவகுமாரும் CM ஆக பதவி வகிப்பார் என அவ்வப்போது பேச்சுகள் உலாவியது. சமீபத்திலும் இதனை சில காங்., தலைவர்கள் பேசியிருந்தனர். இந்நிலையில், 5 ஆண்டுகளும் தானே CM பதவியில் தொடர்வேன் என சித்தராமையா கூறியுள்ளார். அதேநேரம், காங்., உயர் தலைவர்கள் கூறுவதை ஏற்பேன் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News October 2, 2025

விஜய் பக்காவான RSS, BJP மெட்டீரியல்: ஆளூர் ஷாநவாஸ்

image

விஜய்க்கு அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகியிருப்பதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். கரூரில் ஓராயிரம் பிழைகள் செய்தும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமல்லாமல், CM-க்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய் என அவர் தெரித்துள்ளார். இதனால், விஜய், பக்காவான RSS BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது எனவும் அவர் சாடியுள்ளார்.

News October 2, 2025

பிரபல கன்னட நடிகை காலமானார்

image

பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ (70) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இறுதி நாள்களில் வறுமையால் வாடிய அவருக்கு கணவர் மற்றும் பிள்ளைகள் எந்தவிதமான உதவியும் செய்யாமல் இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை. தனிமையிலும், வறுமையிலும் தவித்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News October 2, 2025

இப்பதான் டவுட் அதிகமாகுது: அண்ணாமலை

image

கரூர் உயிரிழப்புகள் பற்றி செந்தில் பாலாஜி பிரஸ்மீட் கொடுத்தது மேலும் சந்தேகத்தை அதிகரிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் செந்தில் பாலாஜி கருத்து திணிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!