News October 2, 2025
பிரபல நடிகருக்கு விரைவில் திருமணம்

அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக X-ல் பதிவிட்டுள்ள அவர், அக்.31-ம் தேதி நயனிகா என்பருடன் நிச்சயதார்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வருங்கால துணையுடன் கைதோர்த்தபடி, அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. சங்கராந்திக்கு முன்பாக திருமணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News October 2, 2025
‘காந்தாரா சாப்டர் 1’ First Review

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘காந்தாரா சாப்டர் 1’ படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு அற்புதமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். மாஸான இன்ட்ரோ, அட்டகாசமான இண்டர்வெல், தரமான க்ளைமாக்ஸ், அசத்தும் VFX என படத்தை பார்த்த மக்கள் சிலாகித்துள்ளனர். இருப்பினும், சிலர் படத்தின் கதை சற்று ஸ்லோவாக இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
News October 2, 2025
எதிர்ப்பு சக்திக்கு இந்த தேநீர் போதும்!

எதிர்ப்பு சக்திக்கு காலையில் இந்த மூலிகை தேநீர் பருகும் படி, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *துளசி, சுக்கு, இலவங்கப்பட்டை, மிளகு, எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து, தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, மூலிகை தேநீர் தயாரித்து பருகலாம். இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *இரவில் மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம். SHARE.
News October 2, 2025
சுயமாக சிந்தித்தால் மட்டுமே விஜய்க்கு எதிர்காலம்: திருமா

கரூர் துயருக்கு திமுக மீது பழி சுமத்துவது என்பது ஆபத்தான அரசியல் என திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல்திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போது தான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசு மீதே தவறு உள்ளதாக அண்ணாமலை உடனடியாக கூறியது, அவர்களுக்கே எதிராகவே முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.