News October 2, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 2, 2025

செங்கல்பட்டு: தீய சக்திகளில் இருந்து காக்கும் அம்மன்

image

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் அமைந்துள்ளது சேப்பாட்டி அம்மன் கோயில். இக்கோயில் சுற்றுவட்டார கிராம மக்களுக்குக் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நோய்களிலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் தங்களை பாதுகாத்து கொள்ள பக்தர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். (ஷேர் பண்ணுங்க)

News October 2, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. (செங்கல்பட்டு மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க)

News October 2, 2025

செங்கல்பட்டு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்.2) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் (ம) பார்களின் உரிமதார்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. (SHARE)

error: Content is protected !!