News April 14, 2024
மன அழுத்தமா..? லீவ் எடுங்கள்

சீனாவைச் சேர்ந்த Pang Dong Lai என்ற நிறுவனம், ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்து கொள்வதற்காக இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்கள் நிம்மதியாக பணியாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமென இந்தியர்கள் கருதுகின்றனர்.
Similar News
News April 28, 2025
மெஹுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்கள் தீக்கிரை?

டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.
News April 28, 2025
கோர விபத்து.. PM மோடி இரங்கல்

ம.பி. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாந்த்சௌர் பகுதியில் பைக் மீது மோதி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
News April 28, 2025
PM மோடி சொன்ன ஆப்… உங்ககிட்ட இருக்கா..?

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் PM மோடி குறிப்பிட்ட SACHET செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்திய வானிலை ஆய்வு துறையின் அதிகாரப்பூர்வ ஆப்பான இதில், தங்கள் பகுதியின் real-time வானிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பேரழிவு காலங்களில் இந்த செயலியின் மூலம் உதவி எண்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்களையும் அறியலாம். இது 12 மொழிகளிலும் சேவை வழங்குகிறது. உங்ககிட்ட இருக்கா?