News April 14, 2024
நூதன பிரச்சாரம் செய்த ஆர்கேநகர் எம்எல்ஏ

தண்டையார்பேட்டை 42வது வார்டுக்குட்பட்ட இரட்டை குளி தெருவில் இன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் மற்றும் 42 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா, ஜெய் மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பொன் இளவரசன் வட்டச் செயலாளர் பகுதி செயலாளர் உள்ளிட்டோர் கையில் வடைகளை வைத்து மத்திய அரசு வாயால் வடை சுடுகிறது என்பதை காட்டும் வகையில் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று வாக்கு சேகரித்தனர்.
Similar News
News August 14, 2025
ரூ.5,000 கோடியில் சென்னையில் வாட்டர் மெட்ரோ

மெட்ரோ சேவையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம்- கோவளம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து, தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோவை இயக்குவதற்கு மொத்தச் செலவு சுமார் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்து.
News August 14, 2025
சென்னை: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

சென்னை மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள்<
News August 14, 2025
மாதம் ரூ.1,000 வேண்டுமா? இங்கு போங்க

சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) திருவொற்றியூர், கோடம்பாக்கம், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.