News October 2, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
Similar News
News October 2, 2025
தூத்துக்குடி: டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரை சேர்ந்த தேவசாமி ஆத்தி (60), தனது மகன் பிரகாஷ் (25) உடன், சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு சென்றார். அப்போது கடக்குளத்தை சேர்ந்த புனிதா ஜென்சி (32) டூவீலரில் எதிரே வந்துள்ளார். அரசூர் அருகே இரு வாகனங்களும் மோதியதில் தேவசாமி ஆத்தி படுகாயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 1, 2025
தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருட்களை சப்ளை செய்வதற்கு மற்றும் டெலிவரி செய்வதற்கு லாரிகள் தேவைப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கான ஒப்பந்தத்தை இணையத்தின் வாயிலாக அக் 2ம் தேதி காலை 10 மணி முதல் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் இருப்பின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் பொருட்களை சப்ளை செய்வதற்கு மற்றும் டெலிவரி செய்வதற்கு லாரிகள் தேவைப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கான ஒப்பந்தத்தை இணையத்தின் வாயிலாக 2ம் தேதி காலை 10 மணி முதல் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் திருத்தங்கள் மற்றும் மாறுதல்கள் இருப்பின் அந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.