News October 2, 2025
NETFLIX சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்த மஸ்க்.. ஏன்?

இயக்குநர் ஹமீஷ் ஸ்டீலை பணியமர்த்தியதால், NETFLIX சப்ஸ்கிரிப்ஷனை கேன்சல் செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை ஆதரித்த ஹமீஷ், சார்லி ஒரு நாஜி என கூறியிருந்தார். சார்லியின் கொலையை கொண்டாடிய ஒருவரை NETFLIX பணியமர்த்தினால், தன்னுடைய பணம் ஒரு பைசா கூட அந்நிறுவனத்திற்கு செல்லாது என காட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News October 2, 2025
எதற்கெடுத்தாலும் இப்படியே கேட்பதா? தமிழிசை

தமிழகத்திற்கு BJP அனுப்பி வைத்த குழு, ஏன் மணிப்பூருக்கும் கும்பமேளாவுக்கும் செல்லவில்லை என்று செந்தில் பாலாஜி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், நம் மாநிலத்தில் எது நடந்தாலும் இப்படியே கேட்பதா? திமுகவுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறையில்லையா என கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக அமைத்த குழு உண்மையை மக்களுக்கு சொல்லிவிடுமோ என்ற பயம்தான் திமுகவுக்கு உள்ளதாகவும் சாடினார்.
News October 2, 2025
லோன் வாங்கி வாழ்க்கையை ஓட்டும் இந்தியர்கள்

பணத்தேவை ஏற்பட்டால் கடைசி ஆப்ஷனாக பர்சனல் லோன் வாங்கியது கடந்தகாலம்; அன்றாட வாழ்க்கையை நடத்தவே பர்சனல் லோன் வாங்குவது இந்த காலம் என்கிறது RupeeRedee-யின் ஆய்வறிக்கை. அதன்படி, ஜன.2025 முதல் ஜூலை 2025 வரையான காலகட்டத்தில் வாங்கப்பட்ட பர்சனல் லோன்களில் 47.8 சதவீதமானது வாடகை, ஷாப்பிங், வீட்டு பழுதுபார்ப்பு, பயணம், பரிசு போன்ற காரணங்களுக்காக வாங்கப்பட்டவையாம். உங்க அனுபவம் எப்படி?
News October 2, 2025
மதி மயக்கும் மடோனா செபாஸ்டியன் கிளிக்ஸ்

அந்த பசுமையான, பாரம்பரிய கேரளத்து தெருக்களில் உலாவும் தேவதையாக மின்னுகிறார் மடோனா செபாஸ்டியன். சிறிய புன்னகையாக இருந்தாலும், ரசிகர்களின் நெஞ்சங்களில் ஊடுருவி சிலிர்ப்பூட்டுகிறார். ஜன்னல் வழியாக ஜாடை பேசும் அவரது கண்களுக்காகவே ரசிகர்கள் லைக்குகளை தட்டுகின்றனர். அப்படிப்பட்ட லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார் மடோனா. அதனை மேலே swipe செய்து பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் லைக் போடுங்கள்.