News October 2, 2025
2 குழந்தைகளுக்கு எமனாக மாறிய இருமல் சிரப்

ராஜஸ்தானில் இருமல் சிரப் (dextromethorphan hydrobromide) குடித்த 2 குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, 10-க்கு மேற்பட்ட குழந்தைகள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். புகாரை தொடர்ந்து மருந்தில் தவறில்லை என நிரூபிக்க சிரப்பை குடித்த டாக்டரும் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மருந்து நிறுவனமான கெய்சன் பார்மா மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Similar News
News October 2, 2025
சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி முர்முவுக்கு கடிதம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதற்கு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் எனக் கூறி, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜோத்பூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முர்மு தலையிட்டு, வாங்சுக்கை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று, அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ கடிதம் அனுப்பியுள்ளார்.
News October 2, 2025
மகளிர் உலகக் கோப்பை: கைகுலுக்கல் கிடையாது

மகளிர் ODI உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அக்.5-ல் இந்தியா – பாக்., அணிகள் மோதவுள்ளன. கொழும்புவில் நடக்கவுள்ள இந்த போட்டியின்போது, பாக்., வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க கூடாது என BCCI அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடரில் ஃபைனல் வரையிலான போட்டிகளில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News October 2, 2025
தவெக ரசிகர் மன்றமாகவே உள்ளது: கார்த்தி சிதம்பரம்

தவெக ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட கட்சி அல்ல, அது ஒரு ரசிகர் மன்றமாகவே இன்னும் செயல்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அதே இடத்தில்தான் அதிமுக பரப்புரையும் நடந்தது என தெரிவித்த அவர், அக்கட்சியில் கட்டுப்பாடுகள் உள்ளதால் தொண்டர்கள் சரியாக இருந்தனர் என்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் சொல்லுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும், ஆனால் அது தவெகவில் இல்லை எனவும் கூறினார்.