News October 2, 2025

Sports Roundup: முதலிடத்தை இழந்த ஹர்திக் பாண்ட்யா

image

*ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், 400 மீ ப்ரீஸ்டைலில் இந்தியாவின் பவ்யா சச்தேவா வெண்கலம் வென்றார். *200மீ பட்டர்ஃபிளை பிரிவில் சஜன் பிரகாஷுக்கு வெண்கலம் கிடைத்தது. *100மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி நடராஜ் வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். *ஐசிசி டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தை இழந்தார். * ஜூனியர் WC துப்பாக்கி சுடுதல், 25மீ பிஸ்டல் பிரிவில் தேஜஸ்வனி வெள்ளி வென்றார்.

Similar News

News October 2, 2025

அக்டோபர் 2: வரலாற்றில் இன்று

image

*அனைத்துலக வன்முறையற்ற நாள்.
*1869 – சுதந்திர போராட்ட வீரர் காந்தி பிறந்தநாள்.
*1904 – நாட்டின் 2-வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்.
*1959 – இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன் பிறந்தநாள்.
*1965 – நகைச்சுவை நடிகர் மயில்சாமி பிறந்தநாள்.
*1975 – முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் நினைவு நாள்.

News October 2, 2025

பைசன் படத்தின் கதை இதுதான்: மாரி செல்வராஜ்

image

‘பைசன்’ படம் கபாடி வீரர் மணத்தி கணேசனின் கதையும், தன் கதையும், தென்தமிழகத்து இளைஞர்களின் கதையும் சேர்ந்தது என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும், இந்த படத்தை மக்கள் பார்க்கும்போது ஒன்று நடக்கும் என நம்புவதாகவும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். இப்படம் அக்.17-ல் ரிலீஸாகவுள்ளது.

News October 2, 2025

பல வேடங்களில் மோசடி செய்த சைதன்யானந்தா

image

பாலியல் & மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சைதன்யானந்தா பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு மாணவியிடம், ‘துபாய் ஷேக்குக்கு பொண்ணு வேணும்… யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டுள்ளார். பலரிடம் ஆபாசமாக பேசியுள்ள அவர், வெளியே சொல்லக் கூடாது என்று அவர்களை மிரட்டியுள்ளார். மேலும், தான் யுனெஸ்கோ தூதர் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் சிறப்பு அதிகாரி என்றெல்லாம் கூறி மோசடிகள் செய்துள்ளார்.

error: Content is protected !!