News October 2, 2025
‘பைசன்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இதோ..

‘பைசன்: காளமாடன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பள்ளி சீருடையில், செம்மண் மேட்டில், சக இளவட்டங்களுடன் துருவ் இருக்கும் அப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல், அப்படத்தின் அடுத்த பாடலான ‘தென்நாடு’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
பைசன் படத்தின் கதை இதுதான்: மாரி செல்வராஜ்

‘பைசன்’ படம் கபாடி வீரர் மணத்தி கணேசனின் கதையும், தன் கதையும், தென்தமிழகத்து இளைஞர்களின் கதையும் சேர்ந்தது என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும், இந்த படத்தை மக்கள் பார்க்கும்போது ஒன்று நடக்கும் என நம்புவதாகவும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். இப்படம் அக்.17-ல் ரிலீஸாகவுள்ளது.
News October 2, 2025
பல வேடங்களில் மோசடி செய்த சைதன்யானந்தா

பாலியல் & மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சைதன்யானந்தா பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு மாணவியிடம், ‘துபாய் ஷேக்குக்கு பொண்ணு வேணும்… யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டுள்ளார். பலரிடம் ஆபாசமாக பேசியுள்ள அவர், வெளியே சொல்லக் கூடாது என்று அவர்களை மிரட்டியுள்ளார். மேலும், தான் யுனெஸ்கோ தூதர் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் சிறப்பு அதிகாரி என்றெல்லாம் கூறி மோசடிகள் செய்துள்ளார்.
News October 2, 2025
1 கிலோ தங்கம்: முன்பு மாருதி 800.. இன்று Defender

1990-களில் 1 கிலோ தங்கம் வாங்கும் காசில் (₹3.2 லட்சம்) மாருதி 800 கார் வாங்க முடியும். 2005-ல் 1 கிலோ தங்கம் காசில் இன்னோவா காரும், 2010-ல் ஃபார்ச்சூனர் காரும் வாங்கலாம். ஆனால், இன்று 1 கிலோ தங்கம் ₹1.17 கோடியாக உள்ளது. இந்த பணத்தில் Land Rover Defender காரை வாங்கலாம் என கூறப்படுகிறது. இதே மாதிரி விலை உயர்வு இருந்தால், 2030-ல் Rolls Royce கார் வாங்க முடியும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.