News October 2, 2025
தமிழகத்திற்கு ₹4,144 கோடி நிதி விடுவிப்பு

மாநில அரசுகளுக்கான ₹1,01,603 கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு ₹4,144 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ₹18,277 கோடி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்.10-ம் தேதி நிதி விடுவிக்கப்படும் நிலையில், இம்முறை 10 நாள்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
1 கிலோ தங்கம்: முன்பு மாருதி 800.. இன்று Defender

1990-களில் 1 கிலோ தங்கம் வாங்கும் காசில் (₹3.2 லட்சம்) மாருதி 800 கார் வாங்க முடியும். 2005-ல் 1 கிலோ தங்கம் காசில் இன்னோவா காரும், 2010-ல் ஃபார்ச்சூனர் காரும் வாங்கலாம். ஆனால், இன்று 1 கிலோ தங்கம் ₹1.17 கோடியாக உள்ளது. இந்த பணத்தில் Land Rover Defender காரை வாங்கலாம் என கூறப்படுகிறது. இதே மாதிரி விலை உயர்வு இருந்தால், 2030-ல் Rolls Royce கார் வாங்க முடியும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News October 2, 2025
ரிச்சர்ட் பாச் பொன்மொழிகள்

*ஒரு பட்டுப்புழு எதை தனது வாழ்வின் முடிவென நினைக்கிறதோ, அப்போதுதான் வண்ணத்துப்பூச்சி ஆகிறது.
*சிறப்பாக கற்பிக்க சிறப்பாக கற்றிருக்க வேண்டும்.
*உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றை கண்டுணர்வதே கற்றலின் பணி.
*நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில், வெற்றியை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்.
*உங்கள் அறிவை கவனியுங்கள், பயத்தை அல்ல. *வாழ்வின் எந்த தருணத்திலும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்.
News October 2, 2025
RSS நிறுவனர் சிறை சென்றார்: மோடி

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இந்துத்துவா அமைப்புகள் ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைத்ததாக காங்., குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதுகுறித்து RSS நூற்றாண்டு விழாவில் பேசிய PM மோடி, RSS நிறுவனரான ஹெட்கேவார் உள்பட பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் RSS தொடங்கப்பட்டதிலிருந்தே நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டது என்றும் மோடி கூறினார்.