News October 1, 2025
அ,ஆ எழுதும் ‘வித்யாரம்பம்’ செய்வதற்கு உகந்த நேரம்

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்வு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியை தொடங்கினால், அதில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. அதன்படி 2 நல்ல நேரங்களில் காலை 7.45 முதல் 8.50 வரை, காலை 10.40 முதல் 12 மணி வரை குழந்தைகளுக்கான அ,ஆ எழுதும் வித்யாரம்பம் நடத்தலாம். உங்க வீட்டு குட்டீஸை நாளை பள்ளியில் கண்டிப்பாக சேருங்க..
Similar News
News October 2, 2025
இனி கத்தாரை தாக்கினால் USA களமிறங்கும்

கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கத்தார் மீதான தாக்குதல் அமெரிக்க இறையாண்மை மீதான தாக்குதல் எனவும், அப்படி ஒரு சம்பவம் இனி நடந்தால் அமெரிக்க ராணுவம் களத்தில் இறங்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாள்களில், அமெரிக்கா இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
News October 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 476 ▶குறள்: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். ▶பொருள்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
News October 2, 2025
இந்தியா வேண்டாம்: கடிதம் எழுதிய பாக்.,

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாக்., மோதும் விளையாட்டு போட்டிகள் இருநாடுகளை தவிர பிற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பாக்., வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிற்கும் பாக்., கடிதம் எழுதியுள்ளது. இரு அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.