News October 1, 2025
செப்டம்பரில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

செப்டம்பர் மாதத்தில் ₹1.89 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது 2024 செப்டம்பரை காட்டிலும் 9.1% அதிகமாகும். அதேபோல், தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. நடப்பு நிதியாண்டு தொடங்கிய கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் ₹10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்ட ஜிஎஸ்டி வசூலை காட்டிலும் 9.9% அதிகமாகும்.
Similar News
News October 2, 2025
இந்தியா வேண்டாம்: கடிதம் எழுதிய பாக்.,

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாக்., மோதும் விளையாட்டு போட்டிகள் இருநாடுகளை தவிர பிற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பாக்., வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிற்கும் பாக்., கடிதம் எழுதியுள்ளது. இரு அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.
News October 2, 2025
கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள M S ராமய்யா ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம் சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 2, 2025
EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.