News October 1, 2025
முடிவை மாற்றும் விஜய்

<<17888163>>ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம்<<>> பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கரூர் சம்பவம் குறித்து ராகுலிடம் பேசிய விஜய், பாஜக தரப்பினர் பேச முயற்சித்தும் பிடி கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவே ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தனது முடிவை மாற்றி விஜய் தற்போது பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
Similar News
News October 2, 2025
கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள M S ராமய்யா ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம் சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 2, 2025
EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 2, புரட்டாசி 16 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை