News October 1, 2025
சற்றுமுன்: பிரபலம் காலமானார்

ரிசர்வ் வங்கி ex கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தையும், ஓய்வுபெற்ற மூத்த உளவுத்துறை அதிகாரியுமான ஆர்.கோவிந்தராஜன் (94), வயது மூப்பு காரணமாக காலமானார். 1953-ல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், இந்திய உளவுத் துறையில் (ரா) இணைந்து, அதன் Joint Intelligence Committee-யின் தலைவராக உயர்ந்தார். தேசத்தின் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றிய அன்னாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News October 2, 2025
EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 2, புரட்டாசி 16 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News October 2, 2025
அமைதி ப்ளானை நிராகரிக்கும் ஹமாஸ்?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட 20 அம்ச திட்டத்தை டிரம்ப் கொண்டுவந்தார். இதற்கு இஸ்ரேல் PM நெதன்யாகு ஒப்புக்கொண்ட நிலையில், ஹமாஸ் இதற்கு இணங்க 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமைதி திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.