News October 1, 2025
போதைப்பொருளுடன் சென்னையில் நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ₹40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை விமான நிலையத்தில் பாலிவுட் துணை நடிகர் விஷால் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Student of the Year உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக விஷால் நடித்திருக்கிறார்.
Similar News
News October 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 2, 2025
5 ஆண்டுகளும் நானே CM: சித்தராமையா

கடந்த 2023 மே முதல் கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் DCM டி.கே.சிவகுமாரும் CM ஆக பதவி வகிப்பார் என அவ்வப்போது பேச்சுகள் உலாவியது. சமீபத்திலும் இதனை சில காங்., தலைவர்கள் பேசியிருந்தனர். இந்நிலையில், 5 ஆண்டுகளும் தானே CM பதவியில் தொடர்வேன் என சித்தராமையா கூறியுள்ளார். அதேநேரம், காங்., உயர் தலைவர்கள் கூறுவதை ஏற்பேன் என்றும் கூறியுள்ளார்.
News October 2, 2025
பிரபல நடிகருக்கு விரைவில் திருமணம்

அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக X-ல் பதிவிட்டுள்ள அவர், அக்.31-ம் தேதி நயனிகா என்பருடன் நிச்சயதார்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வருங்கால துணையுடன் கைதோர்த்தபடி, அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. சங்கராந்திக்கு முன்பாக திருமணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.