News October 1, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலை இன்று ஒரேநாளில் 2 முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹240 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹480 அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிராம் ₹10,950-க்கும், ஒரு சவரன் ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 161-க்கு விற்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல்நாளே தங்கம் விலை ₹720 அதிகரித்திருக்கிறது.
Similar News
News October 2, 2025
ராசி பலன்கள் (02.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 2, 2025
தமிழகத்திற்கு ₹4,144 கோடி நிதி விடுவிப்பு

மாநில அரசுகளுக்கான ₹1,01,603 கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு ₹4,144 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ₹18,277 கோடி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்.10-ம் தேதி நிதி விடுவிக்கப்படும் நிலையில், இம்முறை 10 நாள்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டுள்ளது.
News October 1, 2025
அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது: அன்புமணி

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெற்றப்பட்ட நிலையில், திமுக அரசு ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்தது அரசு ஊழியர்களை ஏமாற்றும் வேலை என்று X-ல் அவர் சாடியுள்ளார். குழு அமைத்து 8 மாதங்கள் ஆகியும் பணிகள் முடிக்கப்படாதது ஒரு கூட்டு சதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.