News October 1, 2025

திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (அக்.04) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரப்பாளையம், திருநகர், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், கருவம்பாளையம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Similar News

News October 2, 2025

திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

image

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 2, 2025

திருப்பூர் அருகே சோக சம்பவம்!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி காந்திமதி (46). இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். அப்போது காந்திமதி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 2, 2025

திருப்பூர் அருகே இளைஞர் பரிதாபமாக பலி!

image

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (22). இவர் படியூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செப்.30ஆம் தேதி காலை படியூர் பகுதியில் பைக்கில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு கம்பெனி வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!