News April 14, 2024

“ராஜீவ்காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது”

image

புதுவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து நேற்று உப்பளம் தொகுதியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி விடுதலையான பிறகு அவரை சட்டமன்றத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி முத்தம் கொடுத்தவர்  ஸ்டாலின்.
அவரை ராகுல்காந்தி கட்டி பிடித்து ஆரத்தழுவியதை ராஜீவ்காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது” என பேசினார்.

Similar News

News November 2, 2025

புதுச்சேரி வரலாற்று புகைப்பட கண்காட்சி

image

புதுவை யூனியன் பிரதேச வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடத்தில் இக்கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், மாணவர்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.சபாநாயகர் செல்வம் துணை சபாநாயகர் ராஜவேல் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

News November 2, 2025

புதுவை: சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

image

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சராயு பாண்டூரங் ஹாண்டே. இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் புதுவைக்கு அக்.31 அன்று சுற்றுலா வந்துள்ளார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறைமலையடிகள் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தபோது ஹண்டேவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 2, 2025

புதுச்சேரி: குழந்தை பிறந்த உடனே சான்றிதழ்!

image

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற நகராட்சி அலுவலகங்களில் காத்திருந்து பெறும் சூழல் இருந்து வந்தது. இதனை மாற்ற மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புதுச்சேரியும் இணைந்துள்ளது. இதன் மூலம் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலேயே பிறப்புச் சான்றிதழ் பெற முடியும். அந்த வகையில் நேற்று புதுச்சேரியில் பிறந்த உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்தது.

error: Content is protected !!