News October 1, 2025
அமெரிக்காவில் ஷட் டவுன் என்றால் என்ன?

அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வேண்டும். ஆளுங்கட்சிக்கு செனட்டில் மெஜாரிட்டி இல்லையெனில், எதிர்க்கட்சியுடன் பேசி ஒப்புதலை பெறுவார்கள். அப்படி ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசின் நிர்வாக செலவுகளுக்கு (ஊழியர்களுக்கான சம்பளம் உள்பட) நிதி கிடைக்காமல் பணிகள் முற்றிலுமாக <<17883569>>ஷட் டவுன்<<>> ஆகும். இதுபோன்ற நெருக்கடியே இப்போது அமெரிக்காவில் நிலவுகிறது.
Similar News
News March 14, 2026
கேஸ் சிலிண்டர் புக்கிங்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் SM-ல் புகார் அளித்துள்ளனர். இதனால், LPG கேஸ் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளின் வாசலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி IOC, BPC, HPC நிறுவனங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய மத்திய அரசு புதிய எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மேலே உள்ள போட்டோவை SWIPE செய்து பாருங்க.
News March 14, 2026
விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 14, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


