News October 1, 2025
BREAKING: கரூர் துயரம்.. தவெக தலைவர்களுக்கு ‘செக்’

கரூர் துயர சம்பவத்தையொட்டி, தவெகவின் முக்கியத் தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, விஜய்யின் பரப்புரை வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வழங்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது உதவியாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
Similar News
News October 1, 2025
அ,ஆ எழுதும் ‘வித்யாரம்பம்’ செய்வதற்கு உகந்த நேரம்

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்வு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியை தொடங்கினால், அதில் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. அதன்படி 2 நல்ல நேரங்களில் காலை 7.45 முதல் 8.50 வரை, காலை 10.40 முதல் 12 மணி வரை குழந்தைகளுக்கான அ,ஆ எழுதும் வித்யாரம்பம் நடத்தலாம். உங்க வீட்டு குட்டீஸை நாளை பள்ளியில் கண்டிப்பாக சேருங்க..
News October 1, 2025
பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார்

ஆக்ராவில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 4 நாள்களுக்கு முன் சாமியார் சைத்தன்யானந்தா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லியில் அவரின் இருப்பிடத்தை சோதனை செய்தபோது செக்ஸ் டாய்ஸ், ஆபாச வீடியோ, உலகத் தலைவர்களை அவர் சந்தித்தது போல் தயார் செய்யப்பட்ட போலி படங்கள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது போனில் காதல் சாட்களும் இருந்துள்ளன.
News October 1, 2025
நாளை மிக கவனம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை தமிழகத்தில் கனமழைக்கான <<17884649>>மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், காலையில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் கவனமாய் இருங்கள் நண்பர்களே!