News October 1, 2025
‘கரூர் செல்கிறார் விஜய்’

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, விஜய் விரைவில் கரூர் செல்ல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெகவின் 2-ம் கட்ட தலைவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றஞ்சாட்டிய தாடி பாலாஜி, அவர்களது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரல்

இரணியல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் கடந்த வாரம் அவரது பைக்கை இரணியல் பிள்ளையார் கோவில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பைக்கை நைசாக திருடி சென்றுள்ளார். மர்ம நபர் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
திருச்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சியில் வரும் 14-ம் தேதி காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News March 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


