News October 1, 2025
BCCI-யிடம் மன்னிப்பு கேட்ட ACC தலைவர்

ஆசிய கோப்பை இறுதி போட்டியின் போது நடந்த சம்பவங்களுக்காக ACC தலைவர் <<17882243>>மொசின் நக்வி<<>> BCCI-யிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சூழல் இந்த அளவிற்கு மோசமடையும் என எதிர்பார்க்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், துபாய் ACC அலுவலகத்திற்கு வந்து கோப்பையை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தை BCCI நிராகரித்துள்ளது.
Similar News
News October 1, 2025
குழந்தையின் பற்கள் சொத்தை ஆகாமல் இருக்க டிப்ஸ்

உங்கள் குழந்தையின் பற்கள் சொத்தையாக இருக்கிறதா? சில எளிய முறைகள் மூலம் அவர்களது பற்கள் கெட்டுபோகாமல் பாதுகாக்கலாம். ➤சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிப்பது நல்லது ➤காலை, இரவு என 2 வேலை பல் துலக்க சொல்லுங்கள் ➤மிருதுவான பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டியது அவசியம் ➤சாக்லேட்டுகளை கடித்து சாப்பிட வேண்டாம் என சொல்லுங்கள் ➤நார்சத்து நிறைந்த பழங்களை கொடுப்பது நல்லது. SHARE.
News October 1, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவம் வேதனை அளிப்பதாக நேற்று வீடியோ வெளியிட்ட விஜய், 2 வாரத்திற்கு தனது தேர்தல் பரப்புரையை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்தார். இந்நிலையில், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். அவருக்கு பாதுகாப்பு கோரி தவெக தரப்பில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூற உள்ளார்.
News October 1, 2025
Gpay, Phonepe பயன்படுத்த கட்டணமா?

Gpay, Phonepe உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். முன்னதாக, UPI சேவை எப்போது இலவசமாக கிடைக்கும் எனக் கூற முடியாது, யாராவது ஒருவர் அந்த சுமையை ஏற்கத்தான் வேண்டும் என சமீபத்தில் அவர் தெரிவித்து இருந்தார். எனினும், வருங்காலத்தில் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.