News October 1, 2025

பரப்புரை தற்காலிகமாக ரத்து: விஜய்

image

தவெக பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, கட்சியின் X பக்கத்தில், நாம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் இருக்கும் இச்சூழலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 1, 2025

டெல்லி சென்றார் ஆதவ் அர்ஜுனா

image

ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் தேசிய விளையாட்டு போட்டிகள் காரணமாக டெல்லி சென்றதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக அவர் கைதாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி சென்றுள்ளார்.

News October 1, 2025

நிலவை பற்றிய தமிழ் பாடல்கள்

image

அமைதியான இரவு நேரத்தில் முழு நிலவை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? பொதுமக்களாகிய நாமே அப்படி ரசித்தால், கவிஞர்கள் சும்மா விடுவார்களா என்ன! தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை, நிலவை பற்றி ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகியுள்ளன. அதில் சிலவற்றை மேல் உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்த நிலவுப் பாடல் என்னவென்று கமெண்ட் செய்யுங்கள்.

News October 1, 2025

செல்போன் ரீசார்ஜ் 3 மாதம் இலவசம்!.. ALERT

image

இந்தியர்கள் அனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் திட்டத்தை PM மோடி தொடங்கி வைத்துள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம்(PIB Factcheck), இது மோசடி எனத் தெரிவித்துள்ளது. அவ்வாறு வரும் மெசேஜ் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உஷார் மக்களே!

error: Content is protected !!