News October 1, 2025
ஹிட் லிஸ்டில் இருக்கும் 2 அமைச்சர்களா?

திமுகவில் களையெடுக்கும் பணிகளை உதயநிதி-செந்தில் பாலாஜி காம்போ செய்துவருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை மா.செ.வான கார்த்திக் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு இளைஞரணியில் இருந்த செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார். இதேபோல, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி 2 அமைச்சர்கள் & 5 MLA-க்களுக்கு அடுத்த முறை சீட் வழங்காமல் கல்தா கொடுக்க திட்டமிடுவதாக தகவல் உலவுகிறது. அந்த 2 அமைச்சர்கள் யாராக இருக்கும்?
Similar News
News March 23, 2026
மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய கொள்கை

மாணவர்களின் மனநலம் பாதுகாப்பு, தற்கொலை தடுப்புக்கு TN அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளும் நல் ஆதரவு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தியுள்ளது. மனநல ஆலோசனைகளுக்கு 14416, 14417, 104, 1098, 181 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News March 23, 2026
இதற்கா கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறீர்கள்?… நயினார்

கடலூர் GH-ல் மின்சாரம் இல்லாமல் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான சான்று என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கற்காலம் போன்று சிகிச்சை அளிக்கவா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், திமுக அரசின் ஈயம் பூசும் வேலையை தமிழக மக்கள் இனி துளியும் நம்ப மாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News March 23, 2026
ORS அனைத்தையும் பருக வேண்டாம்: சுகாதாரத்துறை

வெயிலில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசல் அருந்துவது நல்லது. ஆனால், ஓஆர்எஸ் என்ற பெயரில் பல்வேறு வகை இருப்பதால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ORS கரைசல் மட்டுமே உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பல்வேறு பெயர்களில் விற்கப்படும் ORS ஜூஸ்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


