News October 1, 2025
₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.
Similar News
News March 18, 2026
பெண்கள் வாக்கு திமுகவுக்கு இல்லை: தமிழிசை

தூத்துக்குடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்காதது பெரும் அவலம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திமுகவின் ஆட்சியில் பெண்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காது எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு CM ஸ்டாலின் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 18, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 18, பங்குனி 4 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 18, 2026
பழிவாங்காமல் விடமாட்டேன்: மொஜ்தபா கமேனி

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக சில நாடுகள் பேசியதாக ஈரான் அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், இது சமாதானத்திற்கான நேரம் அல்ல. அமெரிக்காவும் இஸ்ரேலும் மண்டியிட்டு, தோல்வியை ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்க வேண்டும் என மொஜ்தபா தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


