News October 1, 2025
புதுவை கலால் துறை தாசில்தாரின் முக்கிய அறிவிப்பு

புதுவை யூனியன் பிரதேசத்தில் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுவை காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து கள், சாராயம், பார் அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால்சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
புதுச்சேரி: எம்பி வைத்திலிங்கம் குற்றசாட்டு

மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி, இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் 7 பேர் கொண்ட புதிய வக்பு வாரியத்தை அரசு நியமித்துள்ளது. இதில் முதல்முறையாக 2 இந்துக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வைத்திலிங்கம், குறிப்பாக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது எனக் குற்றஞ்சாட்டினார்.
News March 11, 2026
புதுச்சேரி: போலீசார் கூண்டோடு மாற்றம்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், நேற்று இரவு ஜார்கண்டை சேர்ந்த ஹர்திக் ஜா என்பவர் உள்ளே புகுந்து தூங்கிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அப்போது ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மெத்தனமாக செயல்பட்டதால், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 11, 2026
புதுச்சேரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


