News October 1, 2025
உப்பனாறு வாய்க்காலை துார்வார எம்.பி அறிவுறுத்தல்

புதுச்சேரி, பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள உப்பனாறு பெரிய வாய்க்கால் மேம்பாலம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் துார்வாராத நிலையில், மழைக் காலம் துவங்க உள்ளதால், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், காமராஜ் நகர், ஜீவா நகர், பிருந்ததவனம், தென்றல் நகர் மக்கள் வெள்ள அபாயத்தில் உள்ளனர். இந்த நிலையில், உப்பனாறு வாய்க்காலை உடனடியாக துார்வாரிட அதிகாரிகளை எம்.பி வைத்திலிங்கம் அறிவுறுத்தினார்.
Similar News
News March 11, 2026
புதுச்சேரி: தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி மாநில வக்பு வாரிய நிர்வாக சபைக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகளை சேர்ந்த நபர்களை உறுப்பினர்களாக நியமித்ததை எதிர்த்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
News March 11, 2026
புதுவை: தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

காரைக்கால், கீழ காசாக்குடியைச் சேர்ந்தவர் வேம்பு. இவரது மூத்த மகன் ராகவன், கோட்டுச்சேரி மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடி போதையில் இருந்த ராகவனை, அவரது தாய் வேம்பு கண்டித்ததால் மனமுடைந்த ராகவன் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 11, 2026
புதுச்சேரி: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று அறிவித்தார்.


