News October 1, 2025

திருவாரூர்: இலவச கண் சிகிச்சை முகாம் அறிவிப்பு

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் அக்டோபர் 5-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வடசேரி சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்னார்குடி ரோட்டரி சங்கத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

திருவாரூர்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திருவாரூர்: நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு திரட்டல்

image

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் மேற்கு ஒன்றியம், கோவிந்தகுடி கடைவீதியில் சீமான் பேச்சு மற்றும், மாநாட்டுப் பாடலை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்க செய்தும், துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் கொடுத்தும், நாம் தமிழர் கட்சி நன்னிலம் வேட்பாளர் பேராசிரியர் தேன்மொழி திலீப் குமாருக்கு ஆதரவு திரட்டப்பட்டது. இந்நிகழ்வில் வலங்கைமான் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 12, 2026

திருவாரூர்: நில அளவை உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

image

மன்னார்குடியைச் சேர்ந்த விக்டர்சாலமன் கடந்த 2014-ம் ஆண்டு பட்டா மாறுதல் செய்ய நிலஅளவை உதவி ஆய்வாளர் செல்வராஜனை அணுகிய போது அவர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். விக்டர்சாலமன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் லஞ்சம் கொடுக்கும்போது போலீசார் செல்வராஜனை கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் செல்வராஜனுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!