News October 1, 2025

ராம்நாடு: டிகிரி போதும்; ரயில்வே வேலை

image

ராம்நாடு மக்களே; இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை . உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்க.

Similar News

News March 8, 2026

இராமநாதபுரம்: மோசடி வழக்கில் போலீஸ் ஒருவர் கைது

image

பல கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் உள்பட 7 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். போலி வங்கி கணக்குகள் தொடங்கி மோசடி பணத்தை பரிவர்த்தனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள், ATM கார்டுகள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் & சொத்து விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2026

UPSC தேர்வில் இராமநாதபுரம் இளைஞர் சாதனை!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வின் 2025 இறுதி முடிவுகள் வெளியாகின. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வில் இந்தியா முழுவதும் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த, மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் சேக் முகம்மது ஹபிசுதீன்(26) தேசிய அளவில் 485-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

News March 8, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.07) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!