News October 1, 2025

விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 14, 2025

விழுப்புரம் காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

image

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று (நவ.14) நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டினார். கெங்காரம்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள்.குணசீலன், விஜயகுமார் மற்றும் காவலர் வினோத் ஆகியோர் புதுச்சேரி மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர்.

News November 14, 2025

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்சியர் ஆய்வு

image

75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வு நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 14, 2025

மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடும் வகையில் இன்று (நவ.14) “மினி மாரத்தான்” போட்டியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!